ஓடிடி தகவல்

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

செய்திப்பிரிவு

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் நல்ல வருவாயை படம் ஈட்டியது. அதன்படி உலக அளவில் படம் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. படம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோவை அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெலிடட் வீடியோ:

SCROLL FOR NEXT