ஓடிடி தகவல்

மார்ச் 10-ல் ஓடிடியில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ ரிலீஸ்

செய்திப்பிரிவு

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வீட்ல விசேஷம்’ படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள படம் ‘ரன் பேபி ரன்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சாம்.சி.எஸ் இசையமைத்திருந்த இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், ராதிகா சரத்குமார், பகவதி பெருமாள், ஜார்ஜ் மர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் மார்ச் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT