ஓடிடி தகவல்

‘தக்ஸ்’ முதல் ‘மைக்கேல்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள ‘தக்ஸ்’, மிர்ச்சி சிவாவின், ‘சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும்’, டிஸ்னி இயக்கியுள்ள ‘குற்றம் புரிந்தால்’ மற்றும் ‘வெள்ளிமலை’ படங்கள் நாளை (பிப்.24) திரையரங்குகளில் வெளியாகிறது. பாவனாவின், ‘நிதிக்கக்கக்கோரு பிரேமண்டார்ன்’ ( Ntikkakkakkoru Premondarnn) மலையாள படமும், அக்‌ஷய்குமார், இம்ரான் ஹாஸ்மியின் ‘செல்ஃபி’ இந்திப்படமும் நாளை வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: காமெடி, ஹாரர்படமான ‘வி ஹேவ் எ கோஸ்ட்’ (We Have a Ghost) ஹாலிவுட் படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஷயித் அராஃபத் இயக்கத்தில் பிஜூமேனன், வினீத் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள ‘தங்கம்’ மலையாள படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. விஜய்யின் ‘வாரிசு’ அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது. மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கியுள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

இணையதொடர்: நந்தா, பிரசன்னா நடித்துள்ள ‘இரு துருவம்’ தொடரின் இரண்டாவது சீசன் நாளை சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT