சிரஞ்சீவி நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் பிப்ரவரி 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவி - ரவிதேஜா நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. கடந்த ஜனவரி 13-ம் தேதி சக்ராந்தியையொட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது.
ஸ்ருதிஹாசன், கேத்ரின் தெரசா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனத்தை வாசிக்க: வால்டர் வீரய்யா Review: சிரஞ்சீவி, ரவி தேஜா கூட்டணி எடுபட்டதா?