ஓடிடி தகவல்

‘பொம்மை நாயகி’ முதல் ‘ராங்கி’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’, யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’, சமுத்திரகனியின் ‘தலைகூத்தல்’, ‘நான் கடவுள் இல்லை’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. தெலுங்கில் ‘ரைட்டர் பத்மபூஷன்’ வெளியாகியிருக்கிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: அன்னா பக்வின் நடித்துள்ள ‘ட்ரூ ஸ்பிரிட்’ (true spirit) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: த்ரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது. பிரபுசாலமனின் ‘செம்பி’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT