நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்திப் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா, தமிழில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.