ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வரும் 20-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வத்திக்குச்சி’ பட புகழ் கிங்க்ஸ்லீன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. ஆடுகளம் நரேன், கவிதா பாரதி மற்றும் ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ள இப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படம் வரும் ஜனவரி 20-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.