இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: வரலட்சுமி சரத்குமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வி3’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீயர் டெத்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தவிர, ‘தி வொய்’ என்ற இந்தி படம் நாளை வெளியாகிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: அதிதி பாலன்,சாந்தனு பாக்யராஜ், பரத், ரித்திகா சிங் நடித்துள்ள ‘ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ்’ படம் நாளை சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது. சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
போனிகபூர் தயாரிப்பில் ஜான்விகபூர் நடித்த ‘மிலி’ இந்தி திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காண முடியும். தருண் மூர்த்தி இயக்கத்தில் தேவி வர்மா நடித்துள்ள ‘சௌதி வெள்ளக்கா’ மலையாள படம் சோனி லிவ் ஓடிடியில் நாளை வெளியாகிறது. ஆத்வி ஷேஷ் நடித்துள்ள ‘ஹிட் தி செகண்ட் கேஸ்’ தெலுங்கு படம் அமேசான் ப்ரைமில் நாளை காணக்கிடைக்கும்.