திரைப்படம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும்போது, 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன. மதுபான காட்சிகளின் போதும் இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், இப்போது ஓடிடி தளங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
அதில் வரும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தணிக்கை இல்லை. இதனால் மது, புகை, ஆபாச வசனங்கள் ஆகியவை தாராளமாக இடம்பெறுகின்றன. இந்நிலையில் ஓடிடிதளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் தொடர்களில், புகையிலை எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்வது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிப்பரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது.