இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.
தியேட்டர் ரிலீஸ்: வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘லத்தி’ படமும், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ படமும் இன்று (டிசம்பர் 22) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் படம் ‘காபா’ மலையாள படமும், டேமியன் சாசெல்லி இயக்கத்தில் பிராட் பிட், மார்கோட் ராபி நடித்திருக்கும் ஹாலிவுட் படம் ‘பாபிலோன்’ ஹாலிவுட் படமும் இன்று வெளியாகியுள்ளது. தவிர, ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்த ‘சர்க்கஸ்’ இந்தி படம் நாளை (டிசம்பர் 23) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: டான் ஹால் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரேஞ் வோல்டு’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ‘தேங்க் காட்’ இந்திப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த 19-ம் தேதி வெளியானது. லிங்கா, கார்த்திக் நடித்திருக்கும் ‘பரோல்’ அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. விபின் தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப் நடித்துள்ள ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மலையாளப் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். சசிகுமாரின் ‘காரி’ ஜீ5 ஓடிடியிலும், அமலா பாலின் ‘தி டீச்சர்’ நெட்ஃப்ளிக்ஸிலும் நாளை வெளியாகிறது. அக்ஷய் குமாரின் ‘ராம் சேது’ படத்தை அமேசான் ப்ரைமில் நாளை முதல் காணலாம்.