அமலா பால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘தி டீச்சர்’ மலையாள படம் டிசம்பர் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பஹத் பாசில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘ஆதிரன்’ படத்தை இயக்கிய விவேக் இயக்கத்தில் அமலாபால் நடித்த மலையாள படம் ‘தி டீச்சர்’. டான் வின்சென்ட் இசையமைத்த இப்படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அமலா பால், ஹக்கிம் ஷா, செம்பன் வினோத் ஜோஸ், மஞ்சு பிள்ளை, வினிதா கோஷி, உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் உடற்கல்வி ஆசிரியரை மையமாக வைத்து த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரன் பேபி ரன்', 'ஒரு இந்தியன் பிரணாயகதா' மற்றும் 'மிலி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 13 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மீண்டும் மலையாள படத்தில் அமலா பால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.