ஓடிடி தகவல்

ஸ்காட்டிஷ் வாரியர் உடன் WWE ப்ரோமோ வீடியோவில் நடிகர் கார்த்தி

செய்திப்பிரிவு

நடிகர் கார்த்தியும் மல்யுத்த வீரருமான ஸ்காட்டிஷ் வாரியர் இணைந்து நடித்துள்ள ‘டபள்யூடபள்யூஇ’ (WWE) நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இதன் முதல் பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தவிர, இந்த ஆண்டில் ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என மூன்று ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் கார்த்தி. இந்நிலையில், தற்போது அவர் சோனி லிவ் ஓடிடி தளத்திற்கான ‘டபள்யூடபள்யூஇ’ (WWE)க்கான விளம்பர வீடியோ ஒன்றிலும் நடித்திருக்கிறார். சோனி லிவ் வெளியிட்டுள்ள இந்த ப்ரோமோ வீடியோவில் கார்த்தியுடன் மல்யுத்த வீரர் ஸ்காட்டிஷும் இணைந்துள்ளார்.

வீடியோவை பொறுத்தவரை வங்கி ஒன்றில் கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் அங்கிருப்பவர்களை பணயக் கைதிகளாக்கி பணத்தை திருட முயற்சிக்கின்றனர். அப்போது மாஸா பிஜிஎம் ஒன்று ஒலிக்க நடிகர் கார்த்தி அறிமுகம் கொடுக்கிறார். அவரைத் தொடர்ந்து ஸ்காட்டிஷ் வாரியரும் இணைய கொள்ளையர்கள் கூட்டம் திக்குமுக்காடுகிறது. கார்த்தி தமிழ் பேசுவது வழக்கமானது என்றபோதிலும் வீடியோவின் ஸ்பெஷலாக ஸ்காட்டிஷ் வாரியரும் தமிழ் பேசி அசத்துகிறார். 3.31 நிமிடங்கள் ஓடும் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு வெர்சன்களில் கார்த்தியும், இந்தியில் ஜான் ஆப்ரகாமும் இந்த விளம்பர படத்தில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT