ஓடிடி தகவல்

வெப் தொடர் இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்

செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். ரஜினியின் ‘கபாலி’ உட்பட பல படங்களில் பாடல்களும் எழுதியுள்ள அருண்ராஜா, அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இதைத் தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் அவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்துக்காக, வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஜெய், மாஸ்டர் மகேந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT