தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் அக்டோபர் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'நானே வருவேன்'. செல்வராகவன் இயக்கியிருந்த இப்படத்தில் இந்துஜா நாயகியாக நடித்திருந்தார். யுவன் இசையமைத்திருந்த இப்படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.
பிரபு, யோகிபாபு, சரவண சுப்பையா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 'பொன்னியின் செல்வன்' படத்துடன் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி செலவில் உருவான இப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.