ஓடிடி தகவல்

‘பொன்னியின் செல்வன்’ முதல் ‘நட்சத்திரம் நகர்கிறது’ வரை: தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செய்திப்பிரிவு

இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் அறிவோம்.

தியேட்டர் ரிலீஸ்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் வரும் இன்று (செப்டம்பர்29) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' படம் செப்டம்பர் 30-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான் நடிப்பில் புஷ்கர் காயத்ரி எழுதிய இயக்கியுள்ள 'விக்ரம் வேதா' இந்தி படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: தமன்னா, ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளான் ஏ, ப்ளான் பி' (Plan A Plan B) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. டாமன் தாமஸ் இயக்கியுள்ள 'மை பெஸ்ட் ஃபிரண்ட் எக்ஸோரிசம்' (My Best Friend's Exorcism) அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை (செப்டம்பர் 30) வெளியாகிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. பிருத்விராஜ், இஷா தல்வார் நடித்துள்ள 'தீர்ப்பு' (Theerppu) மலையாள படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இணையதள தொடர்கள்: பிரசன்னா, கனிஹா, எஸ்.பி.பி.சரண் நடித்துள்ள 'மேட் கம்பெனி' (Mad Company) ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர்30) வெளியாகிறது.

SCROLL FOR NEXT