ஓடிடி தகவல்

ஓடிடி தொடங்கியது ராஜ் டிவி

செய்திப்பிரிவு

ராஜ் டிவி நிறுவனம், ராஜ் டிஜிட்டல் டிவி என்ற ஓடிடி தளத்தைத் தொடங்கியுள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் இசை வீடியோக்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சந்தாதாரர்களுக்காக, பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்று ராஜ் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. இதை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவி ஜஃப்ருன் நிஷாவும் தொடங்கி வைத்தனர்.

SCROLL FOR NEXT