நெட்பிளிக்ஸ் தளத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர், ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’. திகில், அறிவியல் புனைவு, புதிர், ஃபேன்டஸி என அனைத்தும் கலந்த ஜானரில் உருவான இத்தொடரை டஃபர் பிரதர்ஸ் உருவாக்கினார்கள்.
இத்தொடரின் 2, 3-வது சீசன்கள் 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இதன் 4-வது சீசன், 2022ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இதன் 5-வது சீசனை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். கடந்த மாதம் 27-ம் தேதி இதன் முதல் எபிசோடு வெளியானது.
மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த சீசனின் அடுத்தடுத்து சில எபிசோடுகள் வெளியாயின. இதுவரை 4 எபிசோடுகள் வெளியான நிலையில் அடுத்த 3 எபிசோடுகள் கிறிஸ்துமஸ் அன்றும் கடைசி எபிசோடு புத்தாண்டு அன்றும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் வெளியான ஐந்து நாட்களில் 59.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதாவது சுமார் 6 கோடி பார்வைகள். இதில் 171 சதவீதம் புதிய பார்வையாளர்கள் என்று நெட்பிளிக்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.