ஓடிடி தகவல்

‘தி ஃபேமிலி மேன் சீசன் 3’ ட்ரெய்லர் எப்படி? - விறுவிறுப்புக்கு உத்தரவாதம்!

ப்ரியா

மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் சீசன் 3’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உள்பட பலர் நடித்த வெப் தொடர், ‘தி ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடர், வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் 2-வது சீசனும் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணியுடன் சமந்தாவும் நடித்திருந்தார். தற்போது இதன் 3-வது சீசன் உருவாகி உள்ளது. நவம்பர் 21 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள இத்தொடரின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி - ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் பலமே அதன் விறுவிறுப்பான திரைக்கதைதான். அதனை இந்த ட்ரெய்லரும் உறுதி செய்கிறது. முதல் சீசனில் காஷ்மீர், இரண்டாவது சீசனில் தமிழ்நாடு ஆகிய கதைக்களங்களைக் கொண்ட இத்தொடர் இந்த சீசனில் வடகிழக்கு மாநிலங்களை சுற்றி நடக்கிறது. இந்த சீசனின் முக்கிய வில்லனாக ஜெய்தீப் அஹ்லாவத் வருகிறார். முந்தைய சீசன்களில் ஆங்காங்கே வரும் மெல்லிய நகைச்சுவையும் இதில் இருப்பதாக தெரிகிறது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்ட வழக்கமான நடிகர்கள் தவிர்த்து இதில் நிம்ரத் கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘தி ஃபேமிலி மேன் சீசன் 3’ ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT