ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
இந்த படம் தமிழ் உட்பட கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இந்தியா மற்றும் உலக அளவில் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் மெகா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காட்சி படுத்தப்பட்டுள்ள திரை அரங்குகள் அரங்கம் நிறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில் தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது.
இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்சன் தேவையா, பிரமோத் ஷெட்டி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்கிறார்கள். இதில் ரிஷப் ஷெட்டி முதல் பாகத்தை போலவே தனது இயக்கம் மற்றும் நடிப்பு திறனால் ஈர்க்கிறார். அவருடன் மன்னராக வரும் குல்சன் தேவையா, ருக்மணி வசந்த் ஆகியோரும் தங்கள் நடிப்பால் ஈர்க்கின்றனர். இந்த படத்தின் ரன் டைம் 166 நிமிடங்கள் என ஓடிடி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.