ஓடிடி தகவல்

நவ.21-ல் வெளியாகிறது ‘த ஃபேமிலிமேன் 3’

செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷாரிப் ஹஸ்மி உள்பட பலர் நடித்து வெளியான வெப் தொடர் ‘த ஃபேமிலிமேன்’. இதை ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கினர்.

அமேசான் பிரைம் வீடியோவுக்காக உருவாக்கப்பட்ட இத்தொடர் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இதன் அடுத்த சீசன் உருவானது. அதில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுவும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் மூன்றாவது சீசன் இப்போது உருவாகியுள்ளது.

அதிக எதிர்பார்ப்பைக் கொண்ட இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய் முந்தைய சீசன்களில் நடித்த அதே ஸ்ரீகாந்த் திவாரியாக அதிரடி ஆக்‌ஷனில் களமிறங்குகிறார். இதில் பிரியாமணி, ஜெய்தீப் அலாவத், நிம்ரத் கவுர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த சீசனின் வெளியீட்டு தேதியை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. அதன்படி நவ.21-ம் தேதி இத்தொடர் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT