ஓடிடி தகவல்

ஓடிடியில் அக்.23-ல் ‘ஓஜி’ ரிலீஸ்

ஸ்டார்க்கர்

அக்டோபர் 23-ம் தேதி ‘ஓஜி’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘ஓஜி’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து இதன் முன் கதை மற்றும் பின் கதை ஆகியவை படமாக உருவாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதில் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இப்படம் அக்டோபர் 23-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைப் போலவே, ஓடிடி தளத்தில் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

பிரகாஷ் ராஜ், இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் பவன் கல்யாண் உடன் நடித்திருந்தனர். டிவிவி நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.

Once upon a time in Mumbai, there lived a storm. And now, he’s back. pic.twitter.com/gILAkqzAW5

SCROLL FOR NEXT