ஓடிடி தகவல்

அக்.10 முதல் ஜீ 5 தளத்தில் ‘வேடுவன்’!

செய்திப்பிரிவு

மண்டேலா, குருதியாட்டம், ரத்தசாட்சி, கூலி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் கண்ணா ரவி. இவர் நடித்துள்ள வெப் தொடர் ‘வேடுவன்’.

உணர்ச்சிப் பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் டிராமாவாக உருவாகியுள்ள இந்த வெப் தொடர், ஜீ 5 தளத்தில் அக்.10-ல் வெளியாகிறது.

இது பற்றி கண்ணா ரவி கூறும்போது, “இது ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறுக்கு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக இந்த கதாபாத்திரம் என்னை முழுமையாக வாழ வைத்தது” என்றார்.

SCROLL FOR NEXT