ஓடிடி தகவல்

‘ஹவுஸ்மேட்ஸ்’ திரைப்படம் செப்.19 ஓடிடியில் ரிலீஸ்!

செய்திப்பிரிவு

தர்ஷன், காளி வெங்கட் நடித்த ‘ஹவுஸ்மேட்ஸ்’ திரைப்படம் வரும் செப்.19 ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார். பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை எஸ்கே பிக்சர்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த நிலையில் இப்படம் வரும் செப்.19 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பது குறித்து நடிகர் தர்ஷன் கூறும்போது, “ஹவுஸ் மேட்ஸ் எனது முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இது, வேடிக்கையாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. கார்த்திக் வேடத்தில் நடித்தது காமெடியையும் பயத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் சவாலான அனுபவமாக இருந்தது. எங்கள் படத்தை உலகம் முழுவதும் ஜீ5 தளத்தில் பார்வையாளர்கள் பார்க்கப்போகிறார்கள் என்பது பெரும் சந்தோஷம்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT