கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் வரும் ’ஏஜெண்ட் டீனா’ கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய கதையை வெப் சீரிஸாக உருவாக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம்’. இப்படத்தில் ஏஜெண்ட் டீனா என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இதில் நடன இயக்குநர் வசந்தி நடித்திருந்தார். அவர் தொடர்புடைய காட்சிகள் மையப்படுத்தி தனியாக படமெடுக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்தக் கதாபாத்திரமும் எல்.சி.யூ-வில் அடங்கியிருக்கிறது.
தற்போது ஏஜெண்ட் டீனா என்ற கதாபாத்திரத்தை மையாமாக வைத்து தனியாக வெப் சீரிஸ் உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான மூலக்கதையை அவரே எழுத, வேறொரு இயக்குநர் இயக்குவார் எனத் தெரிகிறது. இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
திரையுலகில் பல ஆண்டுகளாக நடன இயக்குநராக வலம் வருபவர் வசந்தி. நடன இயக்குநர்களான பிருந்தா மற்றும் தினேஷ் ஆகியோரிடம் உதவி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ’விக்ரம்’ படத்தின் மூலம் பலராலும் அறியப்படும் நபராக வசந்தி மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.