ஓடிடி தகவல்

இந்தி, தெலுங்கில் வெளியாகிறது ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடர்

செய்திப்பிரிவு

சரவணன் ஹீரோவாக நடித்துள்ள வெப் தொடர், ‘சட்டமும் நீதியும்’. நம்ரிதா எம்.வி. நாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கிய இந்த வெப் தொடரை, 18 கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். ஜீ 5 தளத்தில் ஜூலை 18-ல் வெளியான இந்த தொடர் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து, இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர் பிரபாகரன் பேசும்போது, “ இந்த வெப் தொடர், தெலுங்கு, இந்தியிலும் இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்த மொழிகளிலும் வெளியாகும்.

நடிகர் சரவணன், நாங்கள் கேட்டதை விடப் பல மடங்கு செய்து தந்தார். நாயகி நம்ரிதாவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் பாவனா, செட் என சொல்ல முடியாத படி, அருமையாகப் பணியாற்றி இருக்கிறார். இயக்குநர் பாலாஜியும் நானும் நிறைய சண்டை போட்டுள்ளோம். ஆனால் 14 நாட்களில் மொத்த தொடரையும் இயக்குநர் முடித்துத் தந்தார். அந்தளவு கடின உழைப்பாளி” என்றார். வெப் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.


SCROLL FOR NEXT