ஓடிடி தகவல்

‘டெக்ஸ்டர்: ரெசரக்‌ஷன்’ வெப் தொடர் சனிக்கிழமை ரிலீஸ்!

ப்ரியா

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்றான ‘டெக்ஸ்டர்: ரெசரக்‌ஷன்’ இந்தியாவில் நாளை (ஜூலை 12) வெளியாகிறது.

2006-ஆம் ஆண்டு முதல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற டிவி தொடர் ‘டெக்ஸ்டர்’. சீரியல் கொலையாளியான ஹீரோவின் மன ஓட்டங்களும், அவனை சுற்றி நடக்கும் விஷயங்களை பேசும் இத்தொடர் 2013 வரை 8 சீசன்களாக வெளியானது.

பல்வேறு திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு இதன் அடுத்த சீசனான ‘டெக்ஸ்டர்: நியூ ப்ளட்’ வெளியானது. இந்த நிலையில் தற்போது இதன் புதிய சீசனான ‘டெக்ஸ்டர்: ரெசரக்‌ஷன்’ நாளை (ஜூலை 12) இந்தியாவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மைக்கேல் சி.ஹால் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க இதில் புதிதாக பிரபல நடிகை உமா தர்மேன், நடிகர் பீட்டர் டிங்க்லேஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். முந்தைய சீசனின் தொடர்ச்சியாகவே இது எழுதப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முந்தைய சீசனின் இறுதியில் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட டெக்ஸ்டர் உயிர் பிழைத்து கோமாவில் இருப்பதாகவும், காணாமல் போன மகனை தேடி நியூயார்க் சென்று வழக்கம்போல தனது உள்ளுணர்வின் அடிப்படையில் கொலைகளை செய்யத் தொடங்குவதாகவும் ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT