அமெரிக்காவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘குட் வைஃப்’ என்ற வெப்தொடரின் தமிழ் வடிவம், அதே பெயரில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது. பிரியாமணி, சம்பத், ஆரி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா உள்பட பலர் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை ரேவதி இயக்கியுள்ளார்.
6 எபிசோடுகளை கொண்ட இத்தொடர் பற்றி ரேவதி கூறும்போது, “இதற்கு முன்பு படங்கள் இயக்கி இருந்தாலும் வெப் தொடர் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனென்றால் படம் என்பது 2 மணி நேரத்துக்குள் தொடக்கம் முடிவு என முடிந்துவிடும். வெப் தொடர் அப்படி கிடையாது.
நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்தக் கதை, தமிழ் பார்வையாளர்களுக்கு வேண்டிய ஒன்றுதான்.கதையை ஹலிதா அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு இந்த கதையை இயக்கி இருக்கிறேன்” என்றார்.