ஓடிடி தகவல்

‘அல்ட்ரா லெஜெண்ட்’ ரொமான்டிக் காமெடி வெப் தொடர்!

செய்திப்பிரிவு

டிஎஸ்கே ஹீரோவாக நடித்துள்ள வெப் தொடர் ‘அல்ட்ரா லெஜெண்ட்’. ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணகுமார் கார்மேகம் இயக்கியுள்ளார். இதில், ஆஷிகா யாஷ், கிரண், ஸ்வேதா, ரகுராமன், ஜெயந்தி என பலர் நடித்துள்ளனர்.

சிவானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிஜில் இசை அமைத்துள்ளார். டேக் 2 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவயோகன் தயாரித்துள்ள இந்த வெப்தொடர் வரும் வெள்ளிக்கிழமை யூடியூப்பில் வெளியாகிறது.

இதுபற்றி இயக்குநர் சரவணகுமார் கார்மேகம் கூறும்போது, “இது ரொமான்டிக் காமெடி தொடர். திருமணமானதும் மனைவி வேலைக்குச் செல்ல, வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்கிற கணவரின் கதைதான் இது. அவர் சந்திக்கிற யதார்த்தமான பிரச்சினைகளை காமெடியாக சொல்லி இருக்கிறோம்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டுள்ள இதன் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தம் 8 எபிசோட். டேக் 2 என்ற யூடியூப் சேனலில் இந்த தொடர் வெளியாகிறது. கண்டிப்பாகப் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும்” என்றார்.

SCROLL FOR NEXT