ஓடிடி தகவல்

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ்!

ஸ்டார்க்கர்

ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று (ஜூன் 13) தேதி ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இத்துடன் வெளியான ‘மாமன்’ படம் பெரும் வரவேற்பினை பெற்றதால், இப்படத்தின் வசூலும் வெகுவாக குறைந்தது. தற்போது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் ஜூன் 13-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம், செல்வராகவன், கவுதம் மேனன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ மற்றும் நிகாரிகா எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வெளியிட்டன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானவுடன் பலரும் கவுதம் மேனனின் கதாபாத்திரம் குறித்து பேசத் தொடங்கினார்கள்.

ஆனால், படம் வெளியானவுடன் எந்தவொரு சத்தமுமின்றி போனது. தற்போது ஓடிடியில் இப்படம் எந்த மாதிரியான விமர்சனத்தைப் பெற போகிறது என்பது இப்போது தெரிந்துவிடும்.

This ain’t a horror movie. It’s a horror movie inside a horror movie.

2025's Biggest Horror Comedy Blast #DDNextLevel will be streaming from June 13th on ZEE5! @iamsanthanam @arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001pic.twitter.com/lFrri9oFfu

SCROLL FOR NEXT