ஓடிடி தகவல்

புதிய வெப் தொடரில் தமன்னா!

செய்திப்பிரிவு

நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர், இப்போது, ‘டேரிங் பார்ட்னர்ஸ்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் மது வணிகத்தில் ஈடுபடும் 2 பெண்களைப் பற்றிய கதை இது. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதை அவர்கள் தைரிய மாக எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பொழுதுபோக்காகவும் உணர்வு பூர்வமாகவும் இந்த வெப் தொடர் பேசும் என்கிறார்கள். இதில் டயானா பென்டி, ஜாவித் ஜாஃபரி, நகுல் மேத்தா, சாரா அஞ்சலி என பலர் நடித்துள்ளனர்.

இதுபற்றி தமன்னா கூறும்போது, “15 வயதிலிருந்தே கேமரா முன் நடித்து வருகிறேன். அப்போதிருந்து 30 வயது பெண்ணாக நான் வளர்ந்திருப்பதுவரை என்னை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ​​அவர்கள் இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தை, இத்தொடர் மூலம் அவர்களுக்குக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். பணிச்சூழலில் வலிமையான பெண்களைப் பற்றிய உண்மையான பார்வையை இந்த தொடர் வழங்கும். இது என் மனதுக்கு நெருக்கமான தொடர்” என்றார்.

SCROLL FOR NEXT