மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், நாசர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.
தற்போது இப்படம் மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடவுள்ளார்கள். திரையரங்கில் வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஓடிடி தளத்தில் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது விரைவில் தெரியவரும்.
Anbu makkaley… The One… is… coming!
Watch Retro, out 31 May, on Netflix in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam. #RetroOnNetflix pic.twitter.com/66zDCSE38S