ஏப்ரல் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது ‘வீர தீர சூரன் 2’.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படம் திட்டமிட்டப்படி காலையில் வெளியாகாமல் மாலையில் தான் வெளியானது. இதனால் வசூல் ரீதியாக சிறிய பின்னடைவு ஏற்பட்டது. மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், சமீபத்திய விக்ரம் படங்களில் நல்ல வசூல் என பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதனிடையே, இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. பட வெளியீட்டுக்குப் பின் இதன் உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது ஏப்ரல் 24-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘வீர தீர சூரன் 2’ வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘வீர தீர சூரன் 2’. இதற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இதனை ஷிபு தமீன்ஸ் தனது ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
One night. No rules. Only survival. A night that will change everything. #VeeraDheeraSooranOnPrime, April 24 pic.twitter.com/os8pfrjyUJ