ஓடிடி தகவல்

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஓடிடியில் மார்ச் 21-ல் ரிலீஸ்

ஸ்டார்க்கர்

மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

பிப்ரவரி 22-ம் தேதி தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மார்ச் 21-ம் தேதி வெளியாகவுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்த்தில் வெளியான படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமானார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தினை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதன் பாடல்கள் இணையத்தில் கொண்டாட்டப்பட்ட அளவுக்கு படம் கொண்டாடப்படவில்லை. பிப்ரவரி 7-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பின்பு பிப்ரவரி 22-ம் தேதி வெளியீடு என்று மாற்றி அறிவிக்கப்பட்டு வெளியானது. இதன் தமிழக உரிமையினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது.

#NEEKonPrime from March 21st onwards… pic.twitter.com/djVf6SfGTE

SCROLL FOR NEXT