சிங்கம்புலி நடித்துள்ள ‘செருப்புகள் ஜாக்கிரதை' வெப் தொடர் மார்ச் 28 ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி வெப் தொடர் ‘செருப்புகள் ஜாக்கிரதை'. சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடர் காமெடி டிராமா பாணியில் உருவாகியுள்ளது.
வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ஒருவர், தனது வைரத்தை செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். தொலைந்து போகும் அந்த செருப்பை தேடி அலையும் அவர்களது பயணமே தொடரின் ஒன்லைன். கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய எல்.வி.முத்து இசையமைத்துள்ளார். இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 28 முதல் ஒளிபரப்பாகிறது.