தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தண்டேல்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.7-ம் தேதி உலகமெங்கும் வெளியான படம் ‘தண்டேல்’. தெலுங்கில் உருவாக்கப்பட்டு இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. இப்படத்துக்கு தெலுங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. உலகமெங்கும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. நாக சைதன்யா திரையுலக வாழ்க்கையில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வரவேற்பைப் பெற்றதைப் போல ஓடிடியிலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. தெலுங்கில் கிடைத்த வரவேற்பு அளவுக்கு, வேறு எந்த மொழியில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தண்டேல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Prema kosam yedu samudhralaina dhaatadaniki osthunnadu mana Thandel!
Watch Thandel, out 7 March on Netflix in Telugu, Hindi, Tamil, Kannada & Malayalam!#ThandelOnNetflix pic.twitter.com/GIBBYHnME9