பெரும்பாலான ஆசிரியர்களுக்குப் பதின்மத்தில் இருக்கும் மாணவ, மாணவியரை எப்படிக் கையாள்வது என்கிற உளவியல் அறிவு அறவே இல்லை. மாறாக அவர்கள் உணர்ச்சிமய மானவர்களாக மாறி அவர்களை மற்றவர்கள் முன் தண்டிக்கத் துடிக்கிறார்கள்.
வகுப்பில் திருட்டுக் குற்றத்துக்கு ஆளாகும் ஓர் அகதிக் குடும்பச் சிறுவனைக் கையாளும் ஓர் அற்புதமான ஆசிரியர் பற்றிய கதைதான் 96வது ஆஸ்கரில் சிறந்த அயல்மொழிப் படத்துக்கான பிரிவில் நுழைந்த ஜெர்மானியப் படமான ‘The teacher's lounge’ (2023). படத்தைப் பார்க்கத் தொடங்கியபின் இடையில் நீங்கள் எழுந்து செல்லமுடியாது. அமேசான் பிரைமில் பாருங்கள்.