நடிகர் அப்பாஸ் 
ஓடிடி தகவல்

நடிகர் அப்பாஸ் ரிட்டர்ன்ஸ்!

ஸ்டார்க்கர்

வெப் தொடரின் ஒன்றின் மூலம் மீண்டும் நடிக்கவுள்ளார் அப்பாஸ்.

முன்னணி நாயகனாக வலம் வந்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாட்டில் செட்டில் ஆனார். நியூஸிலாந்து நாட்டில் அவரும், மனைவியும் பணிக்கு சென்று வந்தார்கள். அவரது குழந்தைகள் அங்கு படித்து வருகிறார்கள். இடையே, சென்னை வந்தவர் சில வீடியோ பேட்டிகள் கொடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தை தொடங்கினார்கள். அதில் வெப் தொடர் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அப்பாஸ். ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக புஷ்கர் - காயத்ரி வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்கள். இதனை சற்குணம் இயக்கவுள்ளார்.

இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அப்பாஸ். அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாஸ் மீண்டும் நடிக்கவிருப்பதால் இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் பலர் நடிக்க அழைக்கக் கூடும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT