அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்தில் இன்று (ஜன.31) வெளியானது.
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த நவம்பர் 22-ம் தேதி அன்று வெளியான திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியிருந்தார். இது ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையில் சினிமா உதவி இயக்குநராக இருக்கிறார் உமாசங்கர் (அசோக் செல்வன்). மருத்துவமனையில் செவிலியாராக இருக்கும் லியோவை (அவந்திகா மிஸ்ரா) கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய தோழிக்கு உதவி செய்ய போய், தன் காதலுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார். அவருடைய காதலைச் சேர்த்து வைக்க ஒரு புறம் நண்பர்கள், இன்னொருபுறம் குடும்பத்தினர் என களமிறங்குகிறார்கள். இந்த முயற்சி ‘சுபம்’ ஆனதா, இல்லையா என்பதே திரைக்கதை.
சில இடங்களில் காட்சிகள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்று முதல் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ் படம்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று (ஜன.31) முதல் காணக் கிடைக்கிறது.