ஓடிடி தகவல்

OTT Pick: Rifle Club - ஆக்‌ஷன் காமெடி பேக்கேஜ்!

ப்ரியா

மலையாள சினிமாவில் ‘மார்கோ’வின் தாக்கத்தால் வசூலில் பின்னடைவு கண்டாலும், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ரைஃபிள் கிளப்’ (Rifle Club) இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்திய அளவிலான டாப் 10 பட்டியலில் முக்கிய இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.

ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், சுரபி லக்‌ஷ்மி, தர்ஷனா ராஜேந்திரன் என நட்சத்திர பட்டாளமே அணிவகுத்துள்ள ‘ரைஃபிள் கிளப்’ திரைப்படம் பக்கா ஆக்‌ஷன் காமெடி பேக்கேஜ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. ‘டான்’ பின்புலம், ரொமான்ஸ் எபிசோடு, கதையின் மையமான வித்தியாசமான ‘ரைஃபிள் கிளப்’ ஃபேமிலி, பழிவாங்கலுடனான துரத்தல், அனல் பறக்கும் ஆக்‌ஷன்களுக்கு இடையே தெறிக்கும் நகைச்சுவைகள் என முழுக்க முழுக்க எங்கேஜிங்கான பரபர திரைக்கதையுடன் மாஸ் ஆடியன்ஸை ஆட்கொள்கிறது ‘ரைஃபிள் கிளப்’.

படத்தின் பிற்பகுதியில் ரைஃபிள் ட்ரேடரான கேங்கஸ்டர் அனுராக் காஷ்யப் டீமுக்கும், ‘ரைஃபிள் கிளப்’ ஃபேமிலி உறுப்பினர்களுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டை யுத்தம் மொத்தமும் அதகள ரகம். 90-களின் கதைக்களத்துக்கு ஏற்ப ரெட்ரோ தன்மையுடன் சிலிர்ப்பூட்டும் மாஸ் தருணங்களால் கவனம் பெற்ற ‘ரைஃபிள் கிளப்’ படத்துக்கு எதிர்பார்த்தபடியே நெட்ஃப்ளிக்ஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT