நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள ‘பணி’ (Pani) திரைப்படம் இம்மாதம் 16-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட வெர்ஷன்களில் காணக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘பணி’. இந்தப் படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி கேரளாவில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லராக ‘மாஸ்’ ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், விமர்சன ரீதியில் கவனம் பெற்றதுடன் ரூ.60 கோடி அளவில் வசூலும் ஈட்டியது.
மாஸ் திரைக்கதையுடன் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இப்படம், எமோஷனலாகவும் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகக் கூடியது என்றும், நடிகராக மட்டுமின்றி இயக்குநராக நேர்த்தியாக செயல்பட்டுள்ளார் என்றும் பாராட்டுகள் குவிந்தன.
சாகர் சூர்யா, அபிநயா, அனூப் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ், சந்தோஷ் நாராயணன், விஷ்ணு விஜய் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.15 கோடி எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படம் ஜனவரி 16-ம் தேதி நள்ளிரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.