ஓடிடி தகவல்

அனுபம் கெர் நடித்துள்ள ‘விஜய் 69’ நேரடி ஓடிடி ரிலீஸ்!

செய்திப்பிரிவு

மும்பை: அனுபம் கெர் நடித்துள்ள ‘விஜய் 69’ திரைப்படம் நேரடியாக வரும் நவம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அக்ஷய் ராய் எழுதி இயக்கியுள்ளார். படத்தை மணீஷ் ஷர்மா தயாரித்துள்ளார். படத்தின் அனுபம் கெர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தவிர்த்து, சங்கி பாண்டே, மிஹிர் அஹூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் நவம்பர் 8-ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 69-வயதான விஜய் என்பவர் சைக்கிளிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. படம் குறித்து அனுபம் கெர் கூறுகையில், “இது ஒரு படம் என்பதையும்தாண்டி பேரார்வம், விடாமுயற்சி, அசைக்கமுடியாத நம்பிக்கையை பேசுகிறது. கனவுகளை அடைய வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும். வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது” என்றார்.

SCROLL FOR NEXT