சென்னை: விமல் நடித்துள்ள ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்த திரைப்படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தில் விமல், கருணாஸ் இருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படத்தை சிவா கிலாரி தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி காணக்கிடைக்கிறது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘சார்’ திரைப்படம் வரும் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.