ஓடிடி தகவல்

‘ஜோக்கர் 2’ முதல் ‘தி கோட்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’ நாளை (அக்.5) திரையரங்குகளில் வெளியாகிறது. விநாயகன், சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ‘தெக்கு வடக்கு’ (Thekku Vadakku) மலையாள படத்தை வெள்ளிக்கிழமை காணலாம். வாக்கின் ஃபீனிக்ஸ் நடித்துள்ள ‘Joker: Folie a Deux’ ஹாலிவுட் திரைப்படத்தை திரையரங்குகளில் தற்போது காண முடியும்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: 2019-ல் வெளியான ‘தி ப்ளாட்ஃபார்ம்’ படத்தின் சீக்வலான ‘தி ப்ளாட்ஃபார்ம் 2’ நாளை நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. அனன்யா பாண்டே நடித்துள்ள படம் ‘CTRL’ இந்திப் படம் வெள்ளிக்கிழமை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: விஜய்யின் ‘தி கோட்’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம். நிவேதா தாமஸின் ‘35-Chinna Katha Kaadu’ தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

SCROLL FOR NEXT