இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: கார்த்தி - அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’, விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’, சதீஷின் ‘சட்டம் என் கையில்’, பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ ஆகிய தமிழ் படங்கள் நாளை (செப்.27) திரையரங்குகளில் வெளியாகின்றன. ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ தெலுங்கு படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ஷோபிதா துலிபாலாவின் ‘லவ் சிதாரா’ (love sitara) இந்திப் படத்தை ஜீ5 ஓடிடியில் நாளை காணலாம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘கில்லர் ஹீட்’ (killer heat) மற்றும் நெட்ஃப்ளிக்ஸில், ‘ரெஜ் பால்’ (Rez ball) ஆகிய ஹாலிவுட் படங்கள் நேரடியாக வெளியிடப்படுகின்றன.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சூரி - அன்னாபென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது. அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம். நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ படத்தை தற்போது நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க முடியும். மலையள படமான ‘வாழ’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது. அனிமேஷன் படமான ‘இன்சைட் அவுட் 2’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஸ்ட்ரீ 2’ (stree 2) படத்தை நாளை அமேசான் ப்ரைமில் காண முடியும்.
இணையத் தொடர்: காதலை அடிப்படையாக கொண்டு உருவான ‘நோபடி வான்ட்ஸ் திஸ்’ (nobody wants this) ஹாலிவுட் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்.26) வெளியிடப்பட்டுள்ளது.