சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வாழை’. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து மாரி செல்வராஜ் தயாரித்த இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் எதிரொலியாக ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. | வாழை பட விமர்சனத்தை வாசிக்க: வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?