ஓடிடி தகவல்

இசையமைப்பாளர் அருண் ராஜின் டாக்ஸிக் காதல்

செய்திப்பிரிவு

தடம், எறும்பு, பீட்ஸா -3, பைரி படங்களுக்கு இசையமைத்தவர் அருண் ராஜ். இவர், ‘பிக்பாஸ்’ அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து வெளியிட்டுள்ள சுயாதீன பாடல், ‘டாக்ஸிக் காதல்’.

டிப்ஸ் இசை நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடல்பற்றி அருண் ராஜ் கூறும்போது, “டாக்ஸிக் காதல் என் மனதுக்கு நெருக்கமான படைப்பு.இந்தப் பாடலில் உள்ள உணர்வுகள் இயல்பானது மற்றும் உண்மையானது. அதனால் அந்த உறவின் தீவிரத்தை இசையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்தேன். அர்ச்சனாவுடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாக இருந்தது. நாங்கள் தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT