ஓடிடி தகவல்

ஷங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஆகஸ்ட் 9-ல் ஓடிடியில் ரிலீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவானது. இதில், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் வசூல் ரீதியாகவும் பின்தங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வரவேற்பை பெறாத நிலையில், மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT