சமந்தா 
ஓடிடி தகவல்

ஃபேன்டஸி தொடரில் நடிக்கிறார் சமந்தா

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தா, இப்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் வருண் தவணுடன் நடித்து முடித்துள்ளார். விரைவில் இது வெளியாக இருக்கிறது. இதை ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ளனர்.

தொடர்ந்து பாலிவுட் ஹீரோ ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் சமந்தா நடிக்க இருக்கிறார். இதன் கதை, எதிர்காலத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீரியட் ஃபேன்டஸி படமான இதற்கு ரக்த் பிரம்மாண்ட் (Rakth Brahmand) என்று தற்காலிகத் தலைப்பு வைத்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் தளத்துக்காக உருவாகும் இந்தத் தொடரில் வாமிகா கபியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதையும் ராஜ் மற்றும் டீகே இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் ‘ஷோ ரன்னராக’ இருப்பார்கள் என்றும் ‘தும்பாட்’ (Tumbbad) படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT