ஓடிடி தகவல்

யோகிபாபுவின் டைமிங் காமெடி: ராதாமோகனின் ‘சட்னி சாம்பார்’ டீசர் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘சட்னி சாம்பார்’இணையத் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

டீசர் எப்படி? - யோகிபாபு அமுதா என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த கடையின் சாம்பாருக்கும், சட்னிக்கும் அப்பகுதியில் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த சட்னி, சாம்பாருக்கான சூத்திரத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வருகிறார் யோகிபாபு. அவருடன் இணைந்து தொழில் நடத்த ஆசைப்படுகிறார் நிதின் சத்யா.

இதற்கு யோகிபாபு மறுப்பு தெரிவிக்க அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் தான் தொடராக இருக்கும் என தெரிகிறது. மேலும் டீசரில் பெரிய அளவில் மற்ற காட்சிகள் எதுவும் காட்டபடவில்லை. யோகிபாபுவின் வழக்கமான டைமிங் நகைச்சுவை கவனிக்க வைக்கிறது. டைட்டிலுக்கு ஏற்ப கதைக்களம் ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வெப்சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

சட்னி சாம்பார்: ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணிபோஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. டீசர் வீடியோ:

SCROLL FOR NEXT