ஓடிடி தகவல்

கவனம் ஈர்க்கும் ‘உப்பு புளி காரம்’ வெப்சீரிஸின் முதல் தோற்றம் 

செய்திப்பிரிவு

சென்னை: பொன்வண்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உப்பு புளி காரம்’ இணையத் தொடரின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடரில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் இத்தொடரை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் வெளியிடுகிறது.

இதனை இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’, ‘மத்தகம்’, ‘லேபில்’ வெப்சீரிஸ்கள் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT